கேரளா தங்கக்கடத்தல் -ஸ்வப்னா சுரேஷ் ஜாமீன் மீது இன்று உத்தரவு..!

கேரளா தங்கக்கடத்தல் வழக்கில் கைதான ஸ்வப்னா சுரேஷின் ஜாமீன் மீது இன்று உத்தரவு பிறப்பிப்பு.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பெயரில் வந்த பார்சலில் ரூ.15 கோடி மதிப்புள்ள 30 கிலோ தங்கத்தை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த தங்க கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேஷ், சரித், சந்தீப் நாயர் மற்றும்  பைசல் பேரத் ஆகியோர் மீது தீவிரவாத நிதி திரட்டல், சட்டவிரோத தடுப்பு செயல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தங்கக் கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேஸை விசாரணை செய்ய அமலாக்கத்துறை முடிவு செய்து நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தது. 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதையடுத்து, மேலும் மூன்று நாட்கள் விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.

இந்நிலையில், ஸ்வப்னா சுரேஷின் ஜாமீன் மீது இன்று கேரள பொருளாதார குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கிறது.

 

 

author avatar
murugan