30 கிலோ தங்கம் கடத்தல்.! தேசிய புலனாய்வு முகமை வழக்கை விசாரிக்கும்.! - உள்துறை அமைச்சகம் உத்தரவு.!

கேரள தங்க கடத்தல் வழக்கை தேசிய புலனாய்வு முகமை விசாரிக்க மத்திய

By manikandan | Published: Jul 10, 2020 07:50 AM

கேரள தங்க கடத்தல் வழக்கை தேசிய புலனாய்வு முகமை விசாரிக்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு.

கேரளாவில் கடந்த ஜூலை 5ஆம் தேதி ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து வந்த விமானத்தில் 30 கிலோ தங்கம் சட்ட விரோதமாக கடத்தி கொண்டுவரப்பட்டது சுங்கத்துறை அதிகாரிகளால் கண்டறியப்பட்டது.

நாடு முழுவதும் பரபரப்பை உண்டாக்கிய இந்த வழக்கை விசாரிக்க மத்திய புலனாய்வு குழுவை கேரளா அனுப்பி வைக்கவேண்டும். அந்த குழுவிற்கு கேரள மாநில அரசு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யும் என பிரதமர் மோடிக்கு கேரள முதல்வர் கடிதம் எழுதியிருந்தார்.

இந்நிலையில், கேரள தங்க கடத்தல் வழக்கை தேசிய புலனாய்வு முகமை விசாரிக்க மத்திய உள்துறை அமைச்சகம் தற்போது உத்தரவு பிறப்பித்துள்ளது.

Step2: Place in ads Display sections

unicc