தனிமைப்படுத்தப்பட்டவர்களை கண்காணிக்க சிறப்பு மோட்டார் சைக்கிள் போலீஸ் படை.!

கொரோனா முன்னெச்சரிக்கையாக வீடுகளில் தனிமைப்படுத்தி உள்ளவர்களை கண்காணிக்க சிறப்பு மோட்டார் சைக்கிள் போலீஸ் படை உருவாக்கப்படும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார். 

கேரளாவில் ஒற்றை எண்ணிக்கையில் இருந்த கொரோனா தொற்று எண்ணிக்கையானது தற்போது இரட்டை இலக்கமாக மாறி வருகிறது.  இன்றைய கொரோனா பாதிப்பு குறித்தும், அதற்காக மேற்கொள்ளப்படும் நவடிக்கைகள் குறித்தும் கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தார்.  

அவர் கூறுகையில், கேரளாவில் இன்று மட்டுமே 16 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் கொரோனா பாதிப்பபடைத்தவர்களின் மொத்த எண்ணிக்கையானது 576ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவுக்கு 80 பேர் கேரளாவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகமாகி கொண்டு வருகிறது. எனவே பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தபட்டுள்ளவர்கள் தங்களை தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். அவர்கள் வீட்டை விட்டு வெளியே வர கூடாது. இவர்களை கண்காணிக்க சிறப்பு மோட்டார் சைக்கிள் போலீஸ் படை உருவாக்கப்படும் எனவும், கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார். 

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.