,

லுங்கியை தூக்கி தர லோக்கலாக குத்தாட்டம் போட்ட கீர்த்தி சுரேஷ்..! வைரலாகும் வீடியோ…

By

நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது தமிழில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக மாமன்னன் படத்திலும், தெலுங்கில் நானிக்கு ஜோடியாக தசரா திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இதில் தசரா திரைப்படம் அடுத்த ஆண்டு (2023) மார்ச் மாதம் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

KeerthySuresh
KeerthySuresh [Image Source: Twitter ]

இந்த திரைப்படத்தை இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒதேலா இயக்கியுள்ளார். படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையைமைத்துள்ளார். இந்த படத்தின் முதல் (தூம் தாம்) பாடலும் கூட சமீபத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பையும் விமர்சனத்தையும் பெற்று வருகிறது.

Dhoom Dhaam Dhosthaan
Dhoom Dhaam Dhosthaan [Image Source: Twitter ]

இந்த பாடலுக்கு பல ரசிகர்களும், பல சினிமா பிரபலங்களும் நடனம் செய்து வீடியோவை வெளியீட்டு வருகிறார்கள். அந்த வகையில், தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கீர்த்தி சுரேஷ் அந்த பாடலுக்கு நடனம் செய்து வீடியோவை வெளியிட்டுள்ளார்.

Keerthy Suresh Dance
Keerthy Suresh Dance [Image Source: Twitter ]

படத்தில் வரும் நானி கெட்டப் போன்று கீர்த்தி சுரேஷ் லுங்கி கட்டிக்கொண்டு குத்தாட்டம் போட்டுள்ள அந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது. இந்த நடனம் எப்படி இருக்கு..? என்று கீர்த்தி சுரேஷ் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கேட்டுள்ளார். அதற்கு ரசிகர்கள் தங்களுடைய கருத்துக்களையும் பதிவிட்டு வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Keerthy Suresh (@keerthysureshofficial)

Dinasuvadu Media @2023