கீர்த்தி சுரேஷ் புகைப்படம்….லட்சக்கணக்கில் மோசடி! கர்நாடக பெண் அதிரடி கைது.!

இன்றைய காலகட்டத்தில்  சினிமா துறையில் இருக்கும் பிரபலங்களின் புகைப்படங்களை பயன்படுத்தி ஆன்லைன் மோசடிகள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில், கர்நாடகாவை சேர்ந்த மஞ்சுளா என்ற பெண் பேஸ்புக் கணக்கு ஒன்றை தொடங்கி அதில் கீர்த்தி சுரேஷின் புகைப்படத்தை டிபியாக வைத்துள்ளார்.

பிறகு, அந்த கணக்கிலிருந்து மஞ்சுளா பலருக்கும் பிரென்ட் ரெக்வஸ்டை கொடுக்க, அதில்  அதே மாநிலத்தை சேர்ந்த பரசுராமா என்பவர் ரெக்வஸ்டை அக்செப்ட் செய்துவிட்டு அவரிடம் பழகி வந்துள்ளார். அந்த புகைப்படத்தில், இருப்பது நடிகை கீர்த்தி சுரேஷ் என்ற விவரம் கூட,  தெரியாமல் யாரோ ஒரு அழகான பெண் ரெக்வஸ்ட் கொடுத்ததாக நினைத்து சந்தோஷமாகி தொடர்ந்து பழகி வந்துள்ளார்.  

இதனையடுத்து, இருவருக்கும் இடையே மிகவும் நெருக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து தனது கல்லூரி படிப்பு செலவுக்கு பண உதவி கேட்டு மஞ்சுளா பரசுராமாவிடம் இருந்து பணத்தை வாங்க  தொடங்கியுள்ளார். பிறகு மஞ்சுளா காதலிப்பதாகவும் கூற ஆசை வார்த்தையில் வீழ்ந்த பரசுராமா கிட்டத்தட்ட 40 லட்சம் கொடுத்து உதவியுள்ளார்.

ஒரு கட்டத்தில், இது பொய்யான பேஸ்புக் கணக்கு என்பதை அறிந்துகொண்ட  அவர் காவல்துறையில் புகார் கொடுத்தார். இதனையடுத்து,  போலீஸ் மஞ்சுவை கைது செய்துள்ளது. கீர்த்தி சுரேஷ் புகைப்படத்தை டிபியாக வைத்து  அந்த பெண் 40 லட்சம் மோசடி செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Leave a Comment