மெகா ஸ்டாரின் படத்தில் முன்னணி நடிகருக்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ்.! எந்த படம் தெரியுமா.!

மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிகக்கவுள்ள ஆச்சார்யா படத்தில் ராம் சரணிற்கு

By ragi | Published: Jul 16, 2020 09:10 AM

மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிகக்கவுள்ள ஆச்சார்யா படத்தில் ராம் சரணிற்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் சமீபத்தில் பெங்குயின் படம் அமேசான் பிரேமில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதனையடுத்து ரஜினியுடன் அண்ணாத்த படத்தில் கமிட்டாகியுள்ளார். அது மட்டுமின்றி தெலுங்கு சூப்பர் ஸ்டாரான மகேஷ் பாபுவின் SarkaruVaariPaata படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளார்.

இந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு சூப்பர் ஸ்டார் படத்தில் வாய்ப்பு கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தெலுங்கு திரையுலகின் மெகா ஸ்டாரான சிரஞ்சீவி சிரஞ்சீவி தற்போது நடிக்கவிருக்கும் திரைப்படங்களில் ஒன்று ஆச்சார்யா. இது ஒரு அதிரடி-பொழுதுபோக்கு கலந்த படமாகும். இந்த படத்தை ராம் சரண் தயாரித்து நடிக்க கொரட்டால சிவா இயக்குகிறார். ஆச்சார்யா படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக திரிஷா விலகியதை அடுத்து காஜல் நடிக்கிறார். இந்தப் படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Step2: Place in ads Display sections

unicc