வேதாளம் தெலுங்கு ரீமேக்கில் இணைந்த கீர்த்தி சுரேஷ்.! அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

வேதாளம் தெலுங்கு ரீமேக்கில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்ற திரைப்படம் வேதாளம். அனிருத் இசையில், வெளியான இந்த படம் வசூல் ரீதியாகவும், விமர்சனரீதியாகவும் நல்ல வெற்றியை அடைந்து. தமிழில் இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தெலுங்கிலும் ரீமேக்காகவுள்ளது.

இந்த தெலுங்கு ரீமேக்கில் அஜித் நடித்த கதாபாத்திரத்தில் நடிகர் சிரஞ்சீவி நடிக்கிறார். படத்தை அஜித்தின் பில்லா படத்தின் ரீமேக்கை இயக்கிய மெஹர் ரமேஷ் இயக்குவதாக கூறப்படுகிறது.

இதில் அஜித்திற்கு தங்கையாக நடித்த லட்சுமி மேனன் கதாபாத்திரத்தில் தெலுங்கில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதற்கான டீசரும் வெளியீடபட்டுள்ளது. படத்திற்கு “போலா ஷங்கர்” என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இன்று நடிகர் சிரஞ்சீவியின் பிறந்த நாள் என்பதால் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.