கமலின் 'வேட்டையாடு விளையாடு 2' ல் இணையும் கீர்த்தி.?

கமலின் 'வேட்டையாடு விளையாடு 2' ல் இணையும் கீர்த்தி.?

கமல்ஹாசனின் வேட்டையாடு விளையாடு 2 ல் கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் சமீபத்தில் பெங்குயின் படம் அமேசான் பிரேமில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதனையடுத்து ரஜினியுடன் அண்ணாத்த படத்தில் கமிட்டாகியுள்ளார். அதில் அவர் ரஜினிகாந்திற்கு சகோதரியாக நடிப்பதாக கூறப்படுகிறது அது மட்டுமின்றி தெலுங்கு சூப்பர் ஸ்டாரான மகேஷ் பாபுவின் SarkaruVaariPaata படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளார்.

இந்த நிலையில் தற்போது இவர் கமல்ஹாசனின் வேட்டையாடு விளையாடு 2 - ல் நடிக்க போவதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன. கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான திரைப்படம் வேட்டையாடு விளையாடு. இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவு செய்துள்ளதாகவும், அதனை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பதாகவும் கூறப்பட்டது. முதலில் இந்த படத்தில் அனுஷ்கா நடிப்பதாக தகவல்கள் வெளியாகியது. ஆனால் தற்போது கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படம் இரட்டை ஹீரோயின்களை கொண்டதா? அல்லது அனுஷ்காவிற்கு பதிலாக கீர்த்தியா? என்பது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானால் தான் தெரிய வரும்.

Latest Posts

சென்னையை வீழ்த்தி டெல்லி 44 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
சென்னை அணிக்கு 176 ரன்கள் நிர்ணயித்த டெல்லி..!
சீனாவின் ஹவாய் ஆராய்ச்சி ஆய்வகத்தில் தீ விபத்து.!
தாமரைபாக்கம் இல்லத்தில் எஸ்.பி.பிக்கு அஞ்சலி செலுத்த அனுமதி இல்லை
பாடகர் எஸ்.பி.பி உடல் காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் - முதல்வர்
லடாக்கின், லேவில் 5.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்.!
கருப்பு பேண்ட் அணிந்து விளையாடும் சென்னை, டெல்லி அணி வீரர்கள்..!
டெல்லியில் இன்று 4,061 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர்.!
அனைத்து வரம்புகளையும் கடந்து அனைத்து தரப்பினரையும் கவர்ந்த பேராளுமை எஸ்பிபி - திருமாவளவன்
முழு அரசு மரியாதையுடன் நடைபெற  முதலமைச்சர் ஆவன செய்ய வேண்டும் - மு.க.ஸ்டாலின்