காவேரி செல்லும் நீர்த்தேக்கங்களில் தண்ணீர் அளவிடும் கருவி! எதிர்க்கிறதா கர்நாடக அரசு!?

காவேரி ஆறு செல்லும் வழியில் உள்ள நீர்த்தேக்க நிலையங்களில் தானியங்கி நீர் அளவிடும் கருவிவை பொறுத்த, காவிரி ஒழுங்காற்று துணை குழு, மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய உள்ளது.

இந்த தானியங்கி கருவி மூலம் காவேரி ஆறு நீர்தேக்கணக்காண தமிழ்நாட்டு மேட்டூர் அணை, கர்நாடகாவில் உள்ள ஹேமாவதி, ஹேரங்கி, கபினி, க்ரிஷ்ணராஜ சாகர் ஆணை ஆகியவற்றில் எவ்வளவு நீர் உள்ளது என்பதை ஆன்லைனில் தெரிந்து கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்க்கு கர்நாடக அரசு எதிர்ப்பு தெரிவிப்பதாக தெரிகிறது. அதாவது, கர்நாடக அரசு காவிரி நீரை அணைகளில் இருந்து பல்வேறு கால்வாய்கள் மூலம் வெவ்வேறு ஊர்களுக்கு நீரை மாற்றிவிடுகிறதாம். அதனால் இந்த கருவி பொறுத்தப்பட்டால், இவ்வாறு செய்வதில் சிக்கல் வந்துவிடும் என கர்நாடக அரசு எதிரிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.