,

மாலத்தீவில் மஜா பண்ணும் காவாலா தமன்னா! வைரலாகும் போட்டோஸ்!

By

Tamannaah Bhatia

நடிகை தமன்னா நடிகர் விஜய் வர்மாவை காதலிப்பதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வமாகவே தெரிவித்திருந்தார். அதைப்போலவே, விஜய் வர்மாவும் தான் தமன்னாவை காதலிப்பதாகவும் தெரிவித்திருந்தார். காதலிப்பதாக அறிவித்ததை தொடர்ந்து இருவரும் அடிக்கடி சுற்றுலா சென்றுகொண்டு புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியீட்டு வருகிறார்கள்.

ஆனால், தமன்னா தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்களில் விஜய் வர்மா இல்லை என்பதால் அவரை எங்கே என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.  தொடர்ச்சியாக படங்களில் நடித்து வந்த தமன்னா  மனதை ஒரு நிலை படுத்துவதற்காக மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு சென்று கடற்கரையை ரசித்துவிட்டு புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்.

ஒரு புகைப்படத்தில் கடற்கரை மணலில் படுத்துக்கொண்டு கோலம் போடும் படி போஸ் கொடுத்துள்ளார். மற்றோரு புகைப்படத்தில் ஜூஸ் குடித்து கொண்டு மிகவும் ஸ்டைலாக போஸ்கொடுத்துள்ளார். மற்றோரு புகைப்படத்தில் கடற்கரையை ரசிக்கும்படி போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Tamannaah Bhatia (@tamannaahspeaks)

எனவே, வழக்கமாக தமன்னா  எடுக்கும் புகைப்படங்கள் அல்லது அவர் எங்கயாவது சுற்றுலா சென்றால்  அவருடைய காதலரான விஜய்வர்மா சென்றுவிடுவார். ஆனால், இப்பொது எடுக்கப்பட்டுள்ள புகைப்படத்தில் அவர் இல்லாததால் உங்களுடைய காதலரை எங்கே?  என தமன்னாவிடம் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். அதைப்போல, இந்த புகைப்படங்களை எடுத்தவரே அவர் தான் எனவும் நகைச்சுவையாக கூறி வருகிறார்கள்.

நடிகை தமன்னா கடைசியாக ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். படத்தில் அவர் நடித்த கதாபாத்திரம் பேச படவில்லை என்றாலும் கூட அவர் குத்து டான்ஸ் ஆடிய “காவாலா” பாடல் இன்றுவரை ட்ரெண்டிங்கில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.