கரூர் மாவட்ட செயலாளர் தலைமையில் அகில இந்திய எதிர்ப்புத் தின ஆர்ப்பாட்டம்.!

கரூரில் சி.ஐ.டி.யு மாவட்ட செயலாளர் ஜீவானந்தம் தலைமையில் அகில இந்திய எதிர்ப்புத்

By balakaliyamoorthy | Published: May 22, 2020 08:47 PM

கரூரில் சி.ஐ.டி.யு மாவட்ட செயலாளர் ஜீவானந்தம் தலைமையில் அகில இந்திய எதிர்ப்புத் தின ஆர்ப்பாட்டம்.

கரூர் மாவட்டத்தில் தொழிலாளர் சட்டங்கள் மீது கை வைக்க கூடாது, பணி நேரமான 8 மணி நேரத்தை அதிகரிக்க கூடாது என்பன உள்ளிட்ட 15 முக்கிய அம்ச கோரிகைகளை வலியுறுத்தி மத்திய, மாநில தொழிற் சங்கங்களின் அகில இந்திய எதிர்ப்பு தின ஆர்ப்பாட்டம் கரூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள ஆர்.எம்.எஸ் தபால் நிலையம் முன்புறம் நடைபெற்றது.

சி.ஐ.டி.யு மாவட்ட செயலாளர் ஜீவானந்தம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற் சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு தொழிற் சங்கங்களை சார்ந்த கூட்டமைப்பினர் சமூக இடைவெளி விட்டு. தனிமனித இடைவெளியை பின்பற்றி, முக கவசம் அணிந்து நின்று கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Step2: Place in ads Display sections

unicc