கருப்பங்காட்டு வலசு படத்தின் டிரைலர் இன்று.!

நீலிமா நடிப்பில் உருவாகும் ‘கருப்பங்காட்டு வலசு’ படத்தின் டிரைலர் கௌதம் மேனன் அவர்களால் இன்று வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நீலிமா இசை, தொலைக்காட்சி தொடரில் பல சீரியல்களில் நடித்தது மட்டுமில்லாமல் நிறம் மாறா பூக்கள் என்ற தொடரின் மூலம் தயாரிப்பாளராகவும் களமிறங்கினார். மேலும் இவர் பல படங்களில் முக்கிய வேடங்களிலும் நடித்துள்ளார். ஆம் ரஜினிகாந்த், நான் மகான் அல்ல, சத்ரு, பண்ணையாரும் பத்மினியும், மன்னர் வகையறா, பாண்டவர் பூமி உள்ளிட்ட படங்களிலும் நடித்து பிரபலமானார். தற்போது இவர் ஹீரோயினாக நடிக்கும் திரைப்படம் ‘ கருப்பங்காட்டு வலசு’. செல்வேந்திரன் இயக்கும் இந்தப் படத்தில் ஜார்ஜ் விஜய், எபினேசர் தேவராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். மேலும் ஆதித்யா மற்றும் சூர்யா இசையமைக்கும் இந்த படத்தில் ஷிராவன் சரவணன் படத்தொகுப்பு செய்கிறார்.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் டிரைலரை இன்று 5 மணிக்கு இயக்குநர் கௌதம் மேனனால் 5 மணிக்கு  வெளியிடப்படும் என்று இயக்குநர் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். ஹோரர் நிறைந்த இந்த படத்தின் டிரைலரை பார்க்க பலர் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.