#BREAKING: மெரினாவில் கருணாநிதிக்கு நினைவிடம்- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..!

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்கப்படும் என  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.

கலைஞரின் அரும்பணிகளை போற்றும் விதமாக கலைஞரின் வாழ்வின் சாதனைகள், சிந்தனைகளை, இளைய தலைமுறையினரும் அறியும் வகையில்  நவீன விளக்கப்படங்களுடன் காமராஜர் சாலை அண்ணா நினைவிட வளாகத்தில் 2.21 ஏக்கர் பரப்பளவில் ரூ.39 கோடி மதிப்பீட்டில் நினைவிடம் அமைக்கப்படும் என சட்டப்பேரவை விதி எண் 110ன் கீழ் பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

இந்திய அரசியலை வழிநடத்திய அரசியல் ஞானி கலைஞர் என்று பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம். 13 முறை தொடர்ந்து எம்.எல்.ஏ.வாக இருந்தவர் தோல்வி அவரை தொட்டதே இல்லை; வெற்றி அவரை விட்டதே இல்லை.  ஐந்து முறை முதலமைச்சராக இருந்து தமிழ் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் திட்டத்தை வகுத்தவர் கலைஞர், இன்று நாம் பார்க்கும் தமிழ்நாடு கலைஞர் உருவாக்கியது.

தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்து பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு உரிமை பெற்றுத் தந்தவர் கலைஞர். நவீன தமிழ் நாட்டை உருவாக்கிய சிற்பி தான் கலைஞர் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்.

author avatar
murugan