37 C
Chennai
Sunday, June 4, 2023

விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக நான் பிரார்த்திக்கிறேன்… போப் பிரான்சிஸ் இரங்கல்.!

ஒடிசா விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளார் புனித...

கணவருடன் சண்டை…4 குழந்தைகளை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்த பெண்.!!

ராஜஸ்தானின் பார்மர் மாவட்டத்தில் உள்ள 27 வயது பெண்...

யார் இந்த ஜப்பான்? கார்த்தியின் பிறந்தநாளை முன்னிட்டு அறிமுக வீடியோ வெளியீடு.!

நடிகர் கார்த்தியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது புது படம் ‘ஜப்பான்’-ன் அறிமுக வீடியோ வெளியாகியுள்ளது.

எழுத்தாளரான ராஜு முருகன் இயக்கிய ‘ஜப்பான்’ என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் ஜப்பான் திரைப்படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியிட இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

இந்நிலையில், கார்த்தியின் 45வது பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் அறிமுக வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. வீடியோவை வைத்து பார்க்கும்பொழுது, நீண்ட இடைவெளிக்குப் பின் கார்த்தி, ஜாலியாக ராக்கெட் ராஜா போன்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் போல் தெரிகிறது.

Karthi in Japan
Karthi in Japan [Image source : @Chrissuccess]

அது மட்டும் இல்லங்க… படத்தில் கார்த்தியின் பெயரே ‘ஜப்பான்’ தான். அவர் தங்கப்பல், காமெடி பீசு என இண்ட்ரோ அமைந்தாலும், கேங்க்ஸ்டர் பாத்திரத்தில் கலக்கவார் போல் தெளிவாக அறிமுக வீடியோ எடுத்து காட்டுகிறது. இந்த திரைப்படம் ஒரு திருட்டு ஆக்‌ஷன் திரைப்படம் என்று கூறப்படுகிறது.

Japan Intro Video Looks
Japan Intro Video Looks [Image source :Trendswood]

மேலும் இந்த படத்தில் ‘கோல்ட்’ ஒரு முக்கிய கருப்பொருளாக தெரிகிறது. இப்படத்தில் அழகிய நடிகை அனு இம்மானுவேல் கதாநாயகியாக நடித்துள்ளார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸின் கீழ் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு மற்றும் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.