கார்த்திகை திருநாள் ஸ்பெஷல்: தித்திக்கும் ஓலை கொழுக்கட்டை.!

கார்த்திகை திருநாள் ஸ்பெஷல்: தித்திக்கும் ஓலை கொழுக்கட்டை.!

இந்துக்களின் முக்கியமான திருவிழாக்களில் ஒன்று கார்த்திகை தீபத் திருநாள். அன்று வீடுகள் தோறும் அகல்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும்.

தீபங்களுடன் பூஜையின் போது ஒருசில பலகாரங்களை செய்து படைப்பது வழக்கம். அதில், கொழுக்கட்டை, பொரியுருண்டை, மாவிளக்கு, அப்பம் போன்றவை வைப்பது குறிப்பிடத்தக்கது.

நம்ம இப்போ பனை ஓலை கொழுக்கட்டை செய்வது பற்றி பார்ப்போம்.
தேவையானப்பொருட்கள்:

பனை ஓலை – 10 முதல் 15 துண்டுகள்

பச்சரிசி மாவு – 4கப்

தேங்காய்த்துருவல் – 1/2 கப்

கருப்பட்டி அல்லதுசர்க்கரை – 2 கப்

ஏலக்காய் தூள் – 1/2 டீஸ்பூன்

சுக்குப்பொடி – 1 டீஸ்பூன்

செய்முறை:

முதலில் கருப்பட்டியில் அரைக்கப் தண்ணீரைச் சேர்த்து காய்ச்சி வடிகட்டிக் கொள்ளவும். பின், பச்சரிசி மாவுடன் ஏலக்காய் தூள், சுக்குப்பொடி, தேங்காய்த்துருவல், சுக்குப்பொடி, கருப்பட்டி பாகு ஆகியவற்றைச் சேர்த்து நன்கு பிசைந்துக் கொண்டு, மாவு மிகவும் கெட்டியாக இல்லாமல் சிறிது குழைவாக உள்ளவாறு நீர் விட்டுப் பிசைந்து கொள்ளவும்.

கட் செய்த பனை ஓலையை விரித்து நடுவில் மாவை வைத்து, ஓலை அளவிற்கு நீளமாக அழுத்தி, முடியவுடன் ஓலை பிரிந்து விடாமல் இருக்க ஒரு நூல் கொண்டு கட்டி வைக்கவும். இதேபோல் மீதமுள்ள மாவு அனைத்தையும் தயார் செய்து இட்லி தட்டில் வைத்து 15 அல்லது 20 நிமிடங்கள் ஆவியில் வேகவிட்டு எடுக்கவும்.

இதனையடுத்து ஆறியபின்பு ஓலையைப் பிரித்து கொழுக்கட்டையைத் தனியாக எடுத்து சாமி முன்பு வைக்கவும். இந்த கொழுக்கட்டையை பொதுவாக திருக்கார்த்திகைத் தினத்தன்று, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் செய்யப்படும் ஒரு சிறப்பு பலகாரம்
ஆகும்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.
Join our channel google news Youtube