நடிகர் விஜய் தற்போது லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். படத்தை 7 ஸ்க்ரீன் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு மும்மரமாக நடைபெற்று வருகிறது.

இந்த திரைப்படம் வரும் அக்டோபர் 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. நவம்பர் மாதம் தீபாவளி பண்டிகை வருவதால், அதற்கு முன்னதாகவே படத்தை வெளியீட்டால் நன்றாக இருக்கும் என தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டு படத்தை வெளியீடுகிறது.

இந்த நிலையில், லியோ படம் வெளியாகும் அதே தேதியில் கார்த்தி நடித்து வரும் ஜப்பான் படத்தை தயாரிப்பாளர்கள் வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஜப்பான் படத்தை ராஜ்முருகன் இயக்கியுள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், படத்தை அக்டோபர் மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே கார்த்தி நடிப்பில் வெளியான கைதி படமும், விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படமும் கடந்த 2019-ஆம் ஆண்டு தீபாவளியை முன்னிட்டு ஒரே தினத்தில் வெளியானது. அதனை தொடர்ந்து மீண்டும் இவர்கள் இருவரின் படங்கள் ஒரே தினத்தில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.