ஏர்செல்-மேக்சிஸ்…!!! வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை…!!! கலக்கத்தில் கார்த்தி சிதம்பரம்…!!!

ஏர்செல்-மேக்சிஸ்…!!! வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை…!!! கலக்கத்தில் கார்த்தி சிதம்பரம்…!!!

ப.சிதம்பரம் மத்திய நிதி மந்திரியாக இருந்தபோது 2006-ம் ஆண்டு ஏர்செல்-மேக்சிஸ் வர்த்தகத்துக்கு வெளிநாட்டு முதலீடு ஊக்குவிப்பு வாரியம் மூலம் அனுமதி வழங்கப்பட்டது. இதில் முறைகேடாக பணபரிவர்த்தனை நடந்ததாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் முதல் முறையாக ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது.

ஏர்செல்-மேக்சிஸ் வர்த்தகத்துக்கு வெளிநாட்டு முதலீடு ஊக்குவிப்பு வாரியம் அனுமதி வழங்கியதற்கான சூழ்நிலை குறித்து அவரிடம் விசாரணை நடத்தியதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

author avatar
kavitha
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *