திண்டுக்கல்லில் கார்த்தி பட ஷூட்டிங் தடுத்து நிறுத்தம்! இந்து முன்னணி அமைப்பினர் போராட்டம்!

கார்த்தி நடிப்பில் வரும் தீபாவளி அன்று கைதி திரைப்படம் வெளியாக உள்ளது. அதனை அடுத்து ரெமோ பட இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ரஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்கிறார். இந்த படத்திற்கு தற்காலிகமாக சுல்தான் என தலைப்பிடப்பட்டிருந்தது.

தற்போது இப்பட ஷூட்டிங் திண்டுக்கல்லில் நடைபெற்றது. இந்நிலையில் நேற்று திண்டுக்கல்லில் உள்ள இந்து அமைப்பின்னர் இப்பட ஷூட்டிங் நடைபெறும் இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். காரணம் இப்படம் சுல்தான் என தலைப்பிடப்பட்டு, குறிப்பிட்ட சமூகல்தினரை தூண்டிவிடும் வகையில் படம் எடுக்கப்படுகிறது. எனவும், இஸ்லாமியத்தை சேர்ந்த திப்பு சுல்தானின் வாழ்வை மையப்படுத்தி எடுக்கப்படுவதாகவும் இந்து அமைப்பினர் குற்றம் சாட்டினார்.

பின்னர், இப்பட  ஷூட்டிங்  நிறுத்தப்பட்டு, படக்குழு அவ்விடத்தில் இருந்து கிளம்பிவிட்டனர். இதனை தொடர்ந்து, படக்குழு சார்பாக வந்த தகவலின்படி, இந்த படம் வரலாற்று பின்னணி கொண்ட படம் அல்ல என தெரிவிக்கப்பட்டது. மேலும் மக்களுக்கு எதனை காண்பிக்க வேண்டும் எதனை காண்பிக்க கூடாது என தேர்வு செய்ய அரசின் சென்சார் குழு உள்ளது. அதே போல எதனை படமாக்கவேண்டுமே என சுதந்திரம் படைப்பாளிகளுக்கு இருக்கிறது. இப்படி இருக்க இடையில் சுய விளம்பரத்திற்கு சில அமைப்பில் இவ்வாறு போராட்டத்தில் ஈடுபடுவதை வன்மையாக கண்டிக்கிறோம் என படக்குழு தெரிவித்தது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.