நாளை முதல் கர்தார்பூர் வழித்தடம் மீண்டும் திறப்பு – மத்திய அரசு அறிவிப்பு!

நாளை முதல் கர்தார்பூர் வழித்தடம் மீண்டும் திறக்கப்படும் என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள பகுதி தான் கர்தார்பூர் பகுதி. சீக்கிய மதத்தை தோற்றுவித்த குருநானக் தனது கடைசி காலத்தில் இந்த பகுதியில் தான் வாழ்ந்து மறைந்ததாக கூறப்படுகிறது. எனவே அவரது நினைவாக அப்பகுதியில் தர்பார் சாஹிப் குருத்வாரா ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

சீக்கிய மதத்தினர் தங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது இந்த கர்தார்பூர் பகுதியில் உள்ள குருத்வாரா சென்று தரிசிக்க வேண்டும் என்பது அவர்களது கடமை. ஆனால், கொரோனா பரவல் காரணமாக இந்த கர்தார்பூர் வழித்தடம் கடந்த ஓராண்டு காலமாக மூடப்பட்ட நிலையில் இருந்தது. அந்தப் பகுதி நாளை முதல் மீண்டும் திறக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், ஸ்ரீ குரு நானக் தேவ் ஜி மற்றும் சீக்கிய மதம் மீது பிரதமர் மோடி கொண்டுள்ள அபரிமிதமான மரியாதையை இந்த முடிவு காட்டுகிறது எனவும் குறிப்பிட்டுள்ளார். இதோ அந்த பதிவு,

author avatar
Rebekal