#KarnatakaElections2023: பகல் 1 மணி நிலவரப்படி 44.16% வாக்குப்பதிவு.!!

#KarnatakaElections2023: பகல் 1 மணி நிலவரப்படி 44.16% வாக்குப்பதிவு.!!

Karnataka Election vote

கர்நாடக பேரவை தேர்தல் பகல் 1 மணி நிலவரப்படி, 44.16% வாக்குப்பதிவு ஆகியுள்ளது. 

கர்நாடகாவில் இன்று சட்டப்பேரவை தேர்தல் தொடங்கப்பட்டுள்ள நிலையில், இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. அரசியல் பிரபலங்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை அனைவரும் தங்களுடைய வாக்குகளை பதிவு செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில், பகல் 1 மணி நிலவரப்படி, 44.16% வாக்குப்பதிவாகியுள்ளது. முன்னதாக காலை 11 மணி நிலவரப்படி, 21% வாக்கு பதவி ஆன நிலையில், தற்போது பகல் 1 மணி நிலவரப்படி, 44.16% பேர்கள் வாக்கு பதிவை செய்துள்ளார்கள்.

மொத்தமாக 5.21 கோடி வாக்காளர்கள் இந்த சட்டப்பேரவை தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். இதில் முதல் முறையாக கிட்டத்தட்ட 9.17 லட்சம் பேர் வாக்களிக்கின்றனர். மேலும், சட்டப்பேரவை தேர்தல் இன்று தொடங்கப்பட்டுள்ள நிலையில், இந்த தேர்தலின் வாக்குப்பதிவு முடிவுகள் வரும் மே 13 ஆம் தேதி வெளியிடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.
Join our channel google news Youtube