காங்கிரஸ் 131 இடங்களில் வெற்றி:
தேர்தல் ஆணையத்தின் தகவலின்படி, கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 131 இடங்களில் வெற்றி பெற்று 5 இடங்களிலும், அடுத்தப்படியாக பாஜக 60 இடங்களில் வெற்றி பெற்று 5 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. இதற்கிடையில், மதச்சார்பற்ற ஜனதா தளம் 19 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
அறுதிப் பெரும்பான்மை:
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 129 இடங்களில் வெற்றி பெற்று அறுதிப் பெரும்பான்மை பெற்றுள்ளது. 224 இடங்களைக் கொண்ட சட்டப்பேரவையில் காங்கிரஸ் இதுவரை 129 இடங்களிலும், பாஜக 56 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. இதற்கிடையில், மதச்சார்பற்ற ஜனதா தளம் 18 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
காங்கிரஸ் 103 இடங்களில் வெற்றி:
காங்கிரஸ் 103 இடங்களில் வெற்றி பெற்று 33 இடங்களில் முன்னிலையில் உள்ளது. வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் பாஜக 50 இடங்களில் வெற்றி பெற்று 14 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் இதுவரை மொத்த வாக்குகளில் 43.11% பெற்றுள்ளது.
காங்கிரஸ் 136 இடங்களில் முன்னிலை:
தேர்தல் ஆணையத்தின் தகவலின்படி, 224 தொகுதிகளுக்கான தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் 136 இடங்களில் முன்னிலை வகிக்கிறது, அடுத்தப்படியாக பாஜக 73 இடங்களிலும், ஜேடி(எஸ்) 20 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது என தகவல் வெளியாகியுள்ளது.
காங்கிரஸ் வெற்றி:
காங்கிரஸ் முன்னிலையில் உள்ள 133 தொகுதிகளில் 8 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஆளும் பாஜக முன்னிலையில் உள்ள 65 தொகுதிகளில் 4 இடங்களில் வெற்றி வெற்றி பெற்றுள்ளது. ஜேடி(எஸ்) 22 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.

வாக்கு சதவீதம்:
தேர்தல் ஆணையத்தின் தரவுகளின்படி, காங்கிரஸ் கட்சி 04 இடங்களில் வெற்றி பெற்று 129 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளதால், காங்கிரஸ் வாக்கு சதவீதம் 43% ஆக அதிகரித்துள்ளது. இதற்கிடையில், பாஜக 64 இடங்களில் முன்னிலையில் இருப்பதால் பாஜகவின் வாக்குகள் 35.8% ஆகக் குறைந்துள்ளது.

காங்கிரஸ் 132 இடங்களில் முன்னிலை:
தேர்தல் ஆணையத்தின் தகவலின்படி, 224 தொகுதிகளுக்கான தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் 132 இடங்களில் முன்னிலை வகிக்கிறது, அடுத்தப்படியாக பாஜக 66 இடங்களிலும், ஜேடி(எஸ்) 22 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது என தகவல் வெளியாகியுள்ளது. பிஜு ஜனதா தளம் (பிஜேடி) வேட்பாளர் திபாலி தாஸ் சுமார் 48000 வாக்குகள் வித்தியாசத்தில் 1 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.
காங்கிரஸ் 119 இடங்களில் முன்னிலை:
தேர்தல் ஆணையத்தின் தகவலின்படி, 224 தொகுதிகளுக்கான தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் 119 இடங்களில் முன்னிலை வகிக்கிறது, அடுத்தப்படியாக பாஜக 72 இடங்களிலும், ஜேடி(எஸ்) 25 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது என தகவல் வெளியாகியுள்ளது.

காங்கிரஸ் முன்னிலை:
தேர்தல் ஆணையம் தகவலின்படி, காங்கிரஸ் 115 இடங்களில் முன்னிலை வகிக்கிறது, பாஜக 73 இடங்களில் முன்னிலையில் உள்ளது, மற்றும் ஜேடி(எஸ்) 29 இடங்களில் முன்னிலை வகிக்கிறது என தகவல் வெளியாகியுள்ளது.
209/224 நிலவரம்:
224 சட்டமன்றத் தொகுதிகளில் 209 தொகுதிகளுக்கான வாக்குகள் எண்ணப்பட்டு தற்போதைய நிலவரப்படி, காங்கிரஸ் 110 இடங்களிலும், பாஜக 71 இடங்களிலும், ஜேடி(எஸ்) 23 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.
ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மையான தொகுதிகளான 113 தொகுதிகளில் முன்னிலை பெறுவது முக்கியமாகிறது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி கிட்டத்தட்ட 110 தொகுதிகளில் முன்னிலை பெற்றிருக்கிறது, மீதமுள்ள தொகுதிகளும் வாக்கு எண்ணப்பட்டு முடிவுகளுக்கு காத்திருக்கிற நிலையில் காங்கிரஸ் கட்சி , கர்நாடகாவில் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- மூத்த தலைவரான கே.எஸ்.ஈஸ்வரப்பாவை மாற்றிய ஷிவமோகாவில் பாஜக 15,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளது.
- எச்.டி.குமாரசாமி மற்றும் மகன் நிகில் குமாரசாமி இருவரும் அந்தந்த தொகுதிகளில் முன்னிலையில் உள்ளனர்
- 2004-ம் ஆண்டு தேர்தலில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்த காங்கிரஸ் வேட்பாளர் ஏ.ஆர்.கிருஷ்ணமூர்த்தி, சாமராஜநகர் மாவட்டத்தில் உள்ள கொள்ளேகால் ரிசர்வ் தொகுதியில் வெற்றிப் பயணத்தை மேற்கொண்டு வருகிறார். அவர் தனது பாஜக போட்டியாளரான சிட்டிங் எம்எல்ஏவான என் மகேஷை எதிர்த்து 17,699 முன்னிலை பெற்றுள்ளார்