38 C
Chennai
Sunday, June 4, 2023

தமிழகத்தின் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…வானிலை மையம் அலர்ட்.!!

வெப்ப சலனம் காரணமாக இன்று தமிழகத்தின் சில மாவட்டங்களில்...

LIVE: ரயில்வே அமைச்சர் பதவி விலக வேண்டும் – தொல் திருமாவளவன்.!!

இலவச பேருந்து சேவை ஒடிசா ரயில் விபத்து காரணமாக கட்டாக்,...

#Karnatakaelection : தொடங்கியது கர்நாடகா சட்டமன்ற தேர்தல்…!

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக மாநில சட்டப்பேரவைக்கு  தேர்தல் தொடங்கியது. 

கர்நாடகா சட்டமன்ற தேர்தலுக்காக கடந்த சில மாதங்களாகவே அரசியல் கட்சிகள் தீவிர முன்னேற்பாடு பணிகளில் ஈடுபட்டு வந்தது.தற்போது கர்நாடகாவில் பாஜக ஆட்சி நடைபெற்று வரும்  நிலையில், மீண்டும் ஆட்சியை பிடிக்க  வேண்டும் என்ற முனைப்பில் பாஜக ஈடுபட்டு வருகிறது.

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக மாநில சட்டப்பேரவைக்கு  தேர்தல் தொடங்கி உள்ளது. கர்நாடகாவில் காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. ஆண்கள் 2430 பேர்,  பெண்கள் 185 பேர் என மொத்தம் 2615 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

இந்த நிலையில், 5.2 கோடி வாக்காளர்களுக்காக 58 ஆயிரத்து 545 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. மொத்தமுள்ளள 224 தொகுதிகளில் பாஜக 224, காங்கிரஸ் 223, மதசார்பற்ற ஜனதாதளம் 207 தொகுதிகளில் போட்டியிடுகிறது.  தேர்தல் நடைபெறுவதையடுத்து, அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு பாதுகாப்பு பணியில் 1 லட்சம் போலீசாரும், தேர்தல் பணியில் 4 லட்சம் பணியாளர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த பதிவாகும் வாக்குகளை மே 13-ஆம்  எண்ணி முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது.