வெளிய வரதீங்க!!வரிசையில் நின்று கை எடுத்து கும்பிட்ட காவலர்கள்

வெளிய வரதீங்க!!வரிசையில் நின்று கை எடுத்து கும்பிட்ட காவலர்கள்

உலகளவில் அசுர வேகத்தில் பரவி வரும் கொரோனாவினால் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்தியாவில் 600க்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில் 16  பேர் மடிந்துள்ளனர்.தமிழகத்தில் 26பேர் பாதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் பலியாகிய நிலையில் இந்தியாவில் தற்போது பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரிக்க துவங்கி உள்ளது.இந்நிலையில் தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் 144 ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் மக்கள் சிலர் சாலைகளில் சுற்றித்திரிந்த நிலையில் அவர்களை காவல்துறையினர் நூதன தண்டனை மூலமாக கண்டித்தும், வழக்குப்பதவு செய்தும் ஏன் வாகனங்களைக்கூட பறிமுதல் செய்தும் வந்த நிலையில் 2வது நாளாக இன்றும் சாலைகளில் வாகன ஒட்டிகளின் நடமாட்டம் இருந்து தான் வருகிறது.தமிழகத்தில் காவல்துறை ஒரு அதிகாரி ஒருவர் கைஎடுத்து கும்பிட்டவாறு வெளியே வராதீர்கள் என்று வாகனஒட்டிகளை  அறிவுறுத்தி அனுப்பினார்.அவருடைய இந்த அணுகுமுறையை கண்ட இளைஞர் ஒருவர் அவர் காலில் விழுந்தார். இந்த சம்பவம் ஆனது அனைவரையும்  நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.இந்நிலையில் கொரோனா  சாலைகளில் யாரும் வர வேண்டாம் என்று கர்நாடக போலீசார் மொத்தமாக சாலையில் நின்று கும்பிட்டபடி வாகனஒட்டிகளிடம் வேண்டி நின்றனர்.வீரியத்தை அறியாமல் இவ்வாறு வெளியே வருவது நியாயமா?இனி வரும் மே,ஏப்ரல் மாதத்தில் 13 லட்சம் பேர் இந்த வைரஸால் பாதிக்கப்படுவார்கள் என்ற சுகாதாரத்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தனது ஆய்வில் தெரிவித்து உள்ளார்.இந்நிலையில் மக்கள் தொகை அதிகம் கொண்டது நம் நாடு அதில் இந்த கொலைக்கார வைரஸ் பாதிப்பு அதிகரித்தால் நிலைமை என்னவாகும்?100 கோடிக்கும் மேல் ஐனத்தொகை கொண்ட இந்திய மக்களை நினைத்து பாருங்கள்.. கட்டுக்குள் கொண்ட வர தவறினால் பின்னர் நேர்வதை எண்ணிப் பார்க்க முடியாத அளவிற்கு விளைவுகளை சந்திக்க இந்தியா தயாராக இருக்க வேண்டும்..எனவே இவற்றை தடுத்து நம் அனைவரையும் பாதுக்காப்போம் ஒற்றுமையோடு செயல்படுவோம்..எனவே வீட்டினுள் இருங்கள்..கைகளை கழுவுங்கள்…

author avatar
kavitha
Join our channel google news Youtube