31.1 C
Chennai
Monday, May 29, 2023

மக்களவை தேர்தல் முடிந்த பிறகே மக்கள்தொகை கணக்கெடுப்பு – மத்திய அரசு முடிவு

2024-ம் ஆண்டு மக்களவை தேர்தல் முடிந்த பிறகே, இந்தியாவில்...

மல்யுத்த வீரர்களை இழுத்துச் செல்வது முறையல்ல..! இந்திய கால்பந்து அணியின் கேப்டன் ட்வீட்..!

மல்யுத்த வீரர்களை இழுத்துச் செல்வது முறையானது அல்ல என்று...

ஐபிஎல் இறுதிப்போட்டியில் மழை வருமா? வானிலை நிலவரம் என்ன?

ஐபிஎல் பைனலில் ரிசர்வ் டேயில் மழை வருவதற்கான வாய்ப்பு...

தலைமை செயலக வாசலில் மண்டியிட்டு வணங்கிய கர்நாடகா துணை முதல்வர் டி.கே.சிவகுமார்…!

தலைமைச்செயலகம் வந்த துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் வாசலில் மண்டியிட்டு வணங்கினார்.

கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில், கர்நாடகா முதல்வரை தேர்ந்தெடுப்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்த நிலையில், கர்நாடகா முதல்வராக சித்தராமையாவும், துணைக்கு முதல்வராக டி.கே.சிவகுமாரும் அறிவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், இன்று கர்நாடக மாநில முதலமைச்சராக சித்தராமையாவும், துணை முதல்வராக டி.கே.சிவகுமாரும் பதவியேற்றனர். இருவருக்கும் மாநில ஆளுநர் தாவர்சந்த் கெலாட் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

இந்த நிலையில், பதவி ஏற்ற பின்னர் முதல்முறையாக தலைமைச்செயலகம் வந்த துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் வாசலில் மண்டியிட்டு வணங்கினார். இதுகுறித்து தனது ட்விட்டர்  ‘பக்கத்தில்,இது ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பின் விருப்பங்களைப் பாதுகாக்கும் தெய்வீக ஆலயம் போன்றது.’ என பதிவிட்டுள்ளார்.