32.8 C
Chennai
Thursday, June 24, 2021

கர்ணன் பாடல் விவகாரம் – நடிகர் தனுஷுக்கு நோட்டீஸ்.!


8
/ 100


இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள கர்ணன் திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கர்ணன் படத்தில் இடம்பெற்றுள்ள பண்டாரத்தி புராணம் பாடல் குறிப்பிட்ட சமூகத்தை புண்படுத்தும் விதமாக இருந்ததாக வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இதனை விசாரித்த நீதிமன்றம், திரைப்படத் தணிக்கைத் துறை மண்டல அலுவலர் படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, மற்றும் இயக்குனர் மாரி செல்வராஜ், பாடலை வெளியிட்ட திங் மியூசிக் இந்தியா யூடியூப் சேனல் ஆகியோர்க்கு நோட்டீஸ் அனுப்பியது.

இந்த நிலையில் தற்போது இதனை தொடர்ந்து பண்டாரத்தி பாடலை நநீக்காமல் படத்தை வெளியீட கூடாது என்று  இடைக்கால தடை விதிக்க கோரி வழக்கு செய்யப்பட்டுள்ளது. இதனைல்,  நடிகர் தனுஷ், பாடிய தேவா, பாடலாசிரியர் யுகபாரதி ஆகியோருக்கு உயர்நீதிமன்ற கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Latest news

Related news