இன்று காலத்தை வென்ற மார்க்சிய தத்துவத்தை உலகுக்கு அளித்த மாமேதை கார்ல் மார்க்ஸ் நினைவு நாள்…

இன்று காலத்தை வென்ற மார்க்சிய தத்துவத்தை உலகுக்கு அளித்த மாமேதை கார்ல் மார்க்ஸ் நினைவு நாள் – மார்ச் 14, 1883.
உலக வரலாற்றில் அழியாத புகழுடன் தலைநிமிர்ந்து நிற்கிறது மாமேதை கார்ல் மார்க்சின் பெயர். அவர் தன் அருமை நண்பர் பிடெரிக் ஏங்கல்சுடன் சேர்ந்து கம்யூனிச லட்சியத்தைப் பிரகடனம் செய்தார். அதன் மூலம் உலகப் பாட்டாளி மக்களுக்கு வழிகாட்டும் தத்துவத்தைத் தந்தார். தலைசிறந்த புரட்சிக்காரராக, உலகப் பாட்டாளி வர்க்க லட்சியத்தின் உறுதியான போராளியாக அவர் தன் வாழ் நாளெல்லாம் உயர்ந்து நின்றார்.அவர் தனது காலத்தில் உலக நாடுகளில் சோஷலிஸ்ட்களுக்கு போதனை செய்த பேராசிரியர்.

உலகம் முழுவதும் தொழிலாளர் வர்க்கக் கட்சிகள் உருவாகக் காரணமாய் இருந்தவர், உதவிகள் செய்தவர். “யுக யுகாந்திரங்களுக்கு அவர் பெயர் நிலைத்து நீடித்து நிற்கும். அவரது மாபெரும் பணியும் நிலைத்து நிற்கும்” என்றார். அவ்வாறே காலங்களை வென்ற மனிதராகிவிட்டார் மார்க்ஸ். அவரது தத்துவம் மார்க்சின் பெயராலே வழங்கப்பட வேண்டும் என்று ஏங்கல்ஸ் தெரிவித்த அடிப்படையில் மார்க்சியமும் காலத் தை வென்ற தத்துவமாகிவிட்டது! சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகள், அடிமைத்தனம், பிற்போக்குத் தன்மைகள் போன்றவை இருக்கும்வரை மார்க்ஸ் வாழ்ந்துகொண்டுதான் இருப்பார்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment