இன்றைய வேட்பாளர்:தூத்துக்குடி தொகுதி தி.மு.க வேட்பாளர் திருமதி.மு.க.கனிமொழி.M. A

வருகிற ஏப்ரல் 18ஆம் தேதியன்று தமிழகத்தில் நாடளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல்  வரவிருப்பதால் தமிழ்நாடு அரசிரல் களம் பரபரப்பாக இயங்கி வருகிறது. நாளுக்கு நாள் அரசியல் வட்டாரத்தில் புதுப்புது திருப்பங்களுடன் அரசியல் களம் நகர்ந்து வருகிறது. இதில் முக்கியமாக  தமிழகத்தில் இருக்கும் இரு பெரும் கட்சிகளான தி.மு.கவும் அ.தி.மு.கவும் பிரதான தேசிய கட்சிகளுடனும், மற்ற கட்சிகளுடனும் பிரமாண்ட கூட்டணியுடன் களமிறங்கி உள்ளது.

Related image

இதில் அதிமுக, திமுக இரு கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து விட்டனர். இன்னும் கூட்டணி கட்சிகள், மற்ற கட்சிகள் இன்னும் வேட்பாளர்களை அறிவிக்காமல் உள்ளது.

இந்நிலையில் தூத்துக்குடி நாடாளுமன்ற தேர்தல் களத்தில் தி.மு.கவும், அதிமுக கூட்டணி கட்சியான பி.ஜே.பியும் நேரடியாக மோத உள்ளன. இதில் தி.மு.க வேட்பாளராக மு.கருணாதிதியின் மகளும் ராஜ்யசபா எம்.பியுமான மு.க.கனிமொழி போட்டியிட உள்ளதாக நேற்று அறிவித்தனர். அறிவித்தவுடன் தி.மு.க வெற்றி பெற்றது போல தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம் என முக்கிய இடங்களில் திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடி தீர்த்து விட்டனர்.

தூத்துக்குடி நாடாளுமன்ற திமுக வேட்பாளராக உள்ள மு.க.கனிமொழி பற்றிய சில குறிப்புகள் இதோ :

Image result for kanimozhi husband

கனிமொழி படித்தது சென்னை எத்திராஜ்.மகளிர் கல்லூரியில் முதுகலை பட்டம் (பொருளாதாரம்). கணவர் பெயர் ஜி.அரவிந்தன் (சிங்கப்பூர் எழுத்தாளர்) மகன் பெயர் ஆதித்யன். மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதிக்கும் மூன்றாவது மனைவி ராஜாத்தி அம்மாள் அவர்களுக்கும் பிறந்த மகள்தான் மு.க.கனிமொழி அவர்கள்.

Image result for kanimozhi son

தி.இந்து, குமுதம், தமிழ் முரசு ஆகிய பத்திரிக்கைகளில் வேலை செய்துள்ளார். தி இந்து நேஷனல் பத்திரிக்கையாளர் சங்கத்தில் தலைவராக ஒரு முறை தேர்வு செய்யப்பட்டுள்ளார். அந்த பதவிக்கு தேர்வான முதல் பெண் இவர்தான். இவர் , கருவறை வாசனை, அகத்திணை, பார்வைகள் கருக்கும், மருதாணி என இன்னும் சில நூல்களை எழுதியுள்ளார். அதனை தமிழ் மட்டுமல்லாது, ஆங்கிலம், மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஆகிய மொழிகளில் திராவிட கழகம் மொழிப்பெயர்த்துள்ளது.

திமுகவில்  மகளிரணிச் செயலாளர் பதவியில் கனிமொழி உள்ளார். 2008ஆம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் 85ஆவது பிறந்தநாளை முன்னிட்டு ‘கலைஞர்_85’ என்ற வேலைவாய்ப்புகான நிகழ்ச்சி 9 மாவட்டங்களில் (நாகர்கோவில், திருநெல்வேலி, தூத்துக்குடி, திருச்சி, விருதுநகர், வேலூர், ஊட்டி, கடலூர், ) நடத்தி 1,33,000 வேலைவாய்ப்பை உருவாக்கி கொடுத்துள்ளார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment