சந்திராயன்-2வை விண்ணில் செலுத்திய ராக்கெட் மூலம் 3 இந்தியர்கள் விண்ணில் பறக்க உள்ளனர்! இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்!

கடந்த ஜூலை 22-ஆம் தேதி நிலவின் தென் துருவத்தை ஆராய்வதற்காக ஜி.எஸ்.எல்.வி எம்.கே 111 ராக்கெட் மூலம் சந்திராயன் 2 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. நிலவின் தென் துருவத்தை விக்ரம் லேண்டர் நெருங்கைகளில் துரதிஷ்டவசமாக லேண்டருடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதனால் சந்திராயன் 2 முயற்சி முழுமையாக நிறைவேறாமல் போனது.

தற்போது இஸ்ரோவானது, இந்திய விண்கலத்தில் மனிதனை விண்ணில் அனுப்பும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த திட்டத்திற்கு ககன்யான் எனும் பெயரிடப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தை பற்றி மேலும் பல தகவல்களை இஸ்ரோ தலைவர் சிவன்  புவனேஷ்வர் ஐஐடி கல்லூரியில் தெரிவித்தார். அவர் கூறுகையில், ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் முதன் முதலாக முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ககன்யான் விண்கலம் மூலம் 3 இந்தியர்களை விண்ணில் அனுப்ப உள்ளர்னர். என்றும்,

இந்த திட்டத்திற்க்காக இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக வேலை செய்து வருகின்றனர். டிசம்பர் 2021இல் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என கூறினார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.