தி கேரளா ஸ்டோரி விவகாரம்.. அரசியலமைப்புக்கு எதிரான செயல்.! கங்கனா ரனாவத் விமர்சனம்.!

0
226
The Kerala Story
The Kerala Story Movie Poster {Image source : Twitter/@adah_sharma}

கேரளா ஸ்டோரி படத்தை தடை செய்வது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என கங்கனா ரனாவத் விமர்சனம் செய்துள்ளார். 

சமீபத்தில் வெளியான தி கேரளா ஸ்டோரி திரைப்படம் நாட்டில் பெரும் சர்ச்சைகளை எழுப்பி வருகிறது. ஏற்கனவே மேற்கு வங்கத்தில் இந்த திரைப்படத்திற்கு மாநில அரசு தடை விதித்தது. அதே போல தமிழகத்தில் விநியோகிஸ்தர்கள் படத்தை வெளியிட மறுத்துவிட்டனர். இந்த விவகாரம் உச்சநீதிமன்றம் வரை சென்றது.

இந்த விவகாரம் குறித்து பல்வேறு கருத்துக்கள் எழுந்து வரும் நிலையில், பாலிவுட் நடிகர்  கங்கனா ரணவத் கூறுகையில், தி கேரளா ஸ்டோரி’ படமானது, மத்திய அரசின் சென்சார் போர்டு அனுமதித்த பிறகு, தடை விதிக்கப்பட்டு இருப்பது, அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்று கூறியுள்ளார்.  சென்ட்ரல் போர்டு அனுமதிக்க ஒரு படத்தை தடை செய்வது அரசியலமைப்பை அவமதிக்கும் செயல் எனவும் அவர் விமர்சனம் செய்துள்ளார்.