நியூஸிலாந்து அணியில் அதிக ரன்கள் அடித்து கேன் வில்லியம்சன் சாதனை !

நேற்றைய போட்டி மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற்றது.இப்போட்டியில் இந்திய அணியும் ,நியூஸிலாந்து அணியும் மோதியது.டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது.

நியூஸிலாந்து அணி 46.1 ஓவரில் 211 ரன்கள் எடுத்து இருந்த போது மழை குறுக்கிட்டதால் இன்று மீண்டும் போட்டி தொடங்க உள்ளது.இந்நிலையில் நடப்பு உலகக்கோப்பையில் நியூஸிலாந்து அணி மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறது.

லீக் போட்டிகளில் நியூஸிலாந்து அணி விளையாடிய 8 போட்டிகளில் தொடர்ந்து 5 போட்டிகளில் வெற்றி பெற்று உள்ளது.அடுத்ததாக விளையாடிய 3 போட்டிகளில்  தோல்வியை சந்தித்து உள்ளது.

இந்நிலையில் நடப்பு உலகக்கோப்பையில் நியூஸிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் 2 சதம் ,2 அரைசதம் அடித்து 548 ரன்கள் குவித்து உள்ளார்.இதன் மூலம் நியூஸிலாந்து அணியில் ஒரு உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்கள் அடித்த  வீரர் என்ற சாதனையை படைத்து உள்ளார்.

கடந்த உலகக்கோப்பை தொடரில் நியூஸிலாந்து அணியில்  குப்தில் 547 ரன்கள் அடித்தது தான் அதிகபட்ச ரன்களாக இருந்தது.தற்போது அந்த சாதனையை கேன் வில்லியம்சன் முறியடித்து உள்ளார்.

author avatar
murugan