காஞ்சிபுரம் பட்டாசு ஆலை உரிமையாளர் நரேந்திரன் கைது.
வெடி விபத்து :
காஞ்சிபுரம் அருகே குருவி மலையில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று காலை திடிரென வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வெடிவிபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
அமைச்சர் நலம் விசாரிப்பு :
மேலும் விபத்தில் காயமடைந்த 13-ற்கும் மேற்பட்டோர் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்பொழுது மருத்துவமனையில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவருபவர்களை அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறி நலம் விசாரித்தார்.
உரிமையாளர் கைது :
குருவி மலையில் உள்ள பட்டாசு ஆலை வெடி விபத்தில் 9 பேர் உயிரிழந்தது தொடர்பாக பட்டாசு ஆலை உரிமையாளர் நரேந்திரனை காவல்துறையினர் கைது செய்தனர்.
அமைச்சர் நேரில் சென்று ஆய்வு :
விபத்தில் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்த அமைச்சர் தா.மோ.அன்பரசன் தற்பொழுது விபத்து ஏற்பட்ட குருவி மலையில் உள்ள பட்டாசு ஆலைக்குச்சென்று ஆய்வு நடத்திவருகிறார்.