காஞ்சிபுரம் வெடிவிபத்து; முதல்வர் மற்றும் பிரதமர் நிவாரணம் அறிவிப்பு.!

காஞ்சிபுரம் வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் மற்றும் பிரதமர், இரங்கல்கள் மற்றும் நிவாரணம் அறிவித்துள்ளனர்.

காஞ்சிபுரம், குருவி மலையில் உள்ள பட்டாசு ஆலையில் நேற்று திடிரென வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் விபத்தில் காயமடைந்த 13-ற்கும் மேற்பட்டோர் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது குறித்து முதல்வர் ஸ்டாலின் தனது அறிக்கையில், காஞ்சிபுரம் வெடிவிபத்து குறித்து மிகுந்த வேதனையடைந்தேன், உயிரிழந்தர்வர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன், மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 3 லட்ச ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 1 லட்ச ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்குவதாக அறிவித்துள்ளார்.

kanchipuram fund

பிரதமர் மோடியும், காஞ்சிபுரம் வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துள்ளார் மேலும் நிவாரணமாக உயிரிழந்தர்வர்களின் குடும்பத்திற்கு 2 லட்ச ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாயும் வழங்குவதாக அறிவித்துள்ளார்.</p

>

author avatar
Muthu Kumar

Leave a Comment