கமலின் இந்தியன் - 2 படத்தினை குறித்த மாஸ்ஸான அப்டேட்.! 

கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள்

By ragi | Published: Jul 09, 2020 04:08 PM

கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இன்று முதல் துவங்க உள்ளதாக கூறப்படுகிறது.

ஷங்கரின் இயக்கத்தில் கமல் தற்போது நடித்து வருகின்ற திரைப்படம் இந்தியன் 2. இந்த படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள பூந்தமல்லியில் நடைப்பெற்று வந்தது. அப்போது  இப்படப்பிடிப்பின் போது கிரேன் விழுந்து 3 பேர் உயிரிழந்தனர் மற்றும் பல பேர் காயமடைந்தனர் . இச்சம்பவம் சினிமா துறையில் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியிருந்தது. கொரோனா வைரஸ் காரணமாக மூன்று மாதங்களுக்கு மேலாக படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் அவர்கள் இசையமைக்கிறார். மேலும் கமலுடன் காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத்தி சிங், பிரியா பவானி சங்கர், நெடுமுடி வேணு, பாபி சிம்கா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.இந்த படத்தில் 30ஆயிரம் பேரை வைத்து சண்டை காட்சிகளை எடுப்பதற்கான வேலைகளில் ஈடுபடும் போது தான் விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. ஒரு வயதான சுதந்திர போராட்ட வீரர் அரசியல்வாதிகளில் ஊழல் செய்பவர்களை களை எடுத்து, இறுதியாக போலீசாரிடம் சரணடைவது போன்று தான் கதையாம். இந்த படம் இடைவேளைக்குப் பிறகு தான் செம மாஸ்ஸாக இருக்கும் என்று கூறப்படுகிறது தற்போது படத்தின் கதை கசிந்துள்ளதால் ஷங்கர் மற்றும் கமல்ஹாசன் கடும் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் சென்னையில் சில தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், இன்று முதல் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை துவங்கவுள்ளதாக கூறப்படுகிறது. படப்பிடிப்பு பணிகளை விரைவில் முடிப்பதோடு, மீதமுள்ள காட்சிகளையும் விரைவில் படமெடுத்து முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Step2: Place in ads Display sections

unicc