இந்த காதல் கதையை சூர்யாவிற்காக தான் எழுதினேன்.! கெளதம் மேனன் ஓபன் டாக்.!

கார்த்திக் டயல் செய்த எண் குறும்படத்தில் வரும் கமல் - காதம்பரி காதல் கதையை

By manikandan | Published: May 26, 2020 09:35 AM

கார்த்திக் டயல் செய்த எண் குறும்படத்தில் வரும் கமல் - காதம்பரி காதல் கதையை சூர்யாவை மனதில் வைத்துதான் எழுதினேன் என இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் தெரிவித்தார்.  

சமீபத்தில் இணையத்தில் வைரலான தமிழ் குறும்படம் என்றால் அது கார்த்திக் டயல் செய்த எண் படம்தான். இந்த படத்தில் சிம்புவும், திரிஷாவும் மிக அழகாக நடித்து இருந்தனர். இந்த குறும்படம் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தொடர்ச்சியாக இருந்ததால் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. 

இந்த குறும்படம் பற்றி இணையத்தில் ரசிகர்கள் சிலாகித்து வருகின்றனர். மேலும், அதில் சிம்பு, கமல் காதம்பரி எனும் கதையை எழுதி முடிப்பது போல படமாக்கப்பட்டிருக்கும்.

கமல் காதம்பரி காதல் கதை பற்றி இயக்குனர் கெளதம் மேனன் கூறுகையில், இந்த காதல் கதையை சூர்யாவை மனதில் வைத்துதான் எழுதினேன். இந்த கதையின் சில பகுதிகளை சூர்யாவிடம் கூறியுள்ளேன். அவருக்கும் பிடித்திருந்தது. விரைவில் நடக்கும் என நம்புகிறேன் என அவர் தெரிவித்தார். 

Step2: Place in ads Display sections

unicc