மக்கள் நீதி மைய்யத்தின் தலைவர் கமலஹாசன் அரவக்குறிச்சி தொகுதியில் பிரச்சாரம்  மேற்கொண்ட பொழுது, இந்தியாவின் முதல் தீவிரவாதி நாதுராம் கோட்சே என்று தெரிவித்தார். இது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது .

இந்த  சர்ச்சை பேச்சு காரணமாக கடந்த 2 நாட்களாக தனது பிரசாரத்தை கமல் ரத்து செய்திருந்தார். இந்நிலையில் கமல் பிரசாரம் குறித்து மக்கள் நீதி மய்யம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் இன்று கொடைக்கானலில் இருந்து புறப்படும்  கமல், திருப்பரங் குன்றத்தில் தோப்பூர், பெரியார் நகர், சமநாதம், பனையூர் ஆகிய  இடங்களில் கமல் பிரசாரம் மேற்கொள்கிறார்.