கமல்ஹாசன் பேசியது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் அறிக்கை கேட்பு ! அறிக்கையை பொறுத்து அடுத்தக்கட்ட நடவடிக்கை – தமிழக தலைமை தேர்தல் அதிகாரி

கமல்ஹாசன் பேசியது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் அறிக்கை கேட்க்கப்பட்டுள்ளது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ விளக்கம் அளித்துள்ளார்.அவர் கூறுகையில்,இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என அரவக்குறிச்சியில் கமல்ஹாசன் பேசியது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் அறிக்கை கேட்கப்பட்டுள்ளது.கரூர் மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.மாவட்ட தேர்தல் அதிகாரி தரும் அறிக்கையை பொறுத்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் 4 தொகுதி இடைத்தேர்தல், மறுவாக்குப்பதிவு ஆகிய தேர்தல் பணிகளில் 5,508 ஊழியர்கள் ஈடுபடுகின்றனர். பாதுகாப்பு பணியில் 1300 சிஆர்பிஎப் வீரர்கள் மற்றும் 15,939 காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்

Leave a Comment