மக்களவைத் தேர்தல்-மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்களை அறிவித்தார் கமல்ஹாசன்

  • மக்களவைத் தேர்தல் தேதி அறிவித்ததை தொடர்ந்து தமிழகத்தில்  தி.மு.க மற்றும் அ.தி.மு.க வேட்பாளர்களை அறிவித்தனர்.
  • மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர்களை இன்று  வெளியிட்டார் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன்.

கமல்ஹாசன் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 21-ந் தேதி மக்கள் நீதி மய்யம் கட்சியைத் தொடங்கினார். மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் கட்சியின் பெயர், கொடி ஆகியவற்றை அறிவித்தார்.

இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.

மக்களவை தேர்தலில் 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவோம் என கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

அதேபோல்  மக்களவை தேர்தலுக்கான மக்கள் நீதி மய்யம்  கட்சிக்கு “டார்ச் லைட்” சின்னமாக ஒதுக்கப்பட்டது.

Image result for கமல் ஹாசன்

மக்களவைத் தேர்தல் தேதி அறிவித்ததை தொடர்ந்து தமிழகத்தில்  தி.மு.க மற்றும் அ.தி.மு.க வேட்பாளர்களை அறிவித்தனர்.

இந்நிலையில்  2019 மக்களவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் வேட்பாளார்கள் பட்டியலை கமல்ஹாசன் வெளியிட்டார்.முதற்கட்டமாக 21 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை வெளியிட்டார்.அதேபோல் வேட்பாளர் பட்டியல் 24-ம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.

வேட்பாளார்கள் பட்டியல்: 

  1. நீலகிரி- ராஜேந்திரன்,
  2. திண்டுக்கல்- சுதாகர்,
  3. திருச்சி- ஆனந்தராஜா,
  4. சிதம்பரம்- ரவி,
  5. மயிலாடுதுறை- ரிபாஃயுதீன்,
  6. நாகப்பட்டினம்- குருவையா,
  7. தேனி- பாலகிருஷ்ணன்,
  8. தூத்துக்குடி- பொன்.குமரன்,
  9. திருநெல்வேலி- வென்னிமலை,
  10. கன்னியாகுமரி- எபிநேசர்,
  11. புதுச்சேரி சுப்பிரமணியன்
  12. திருவள்ளூர்- லோகரங்கன்,
  13. வடசென்னை- மவுரியா,
  14. மத்திய சென்னை- கமீலா நாசர்,
  15. ஸ்ரீபெரும்புதூர்- சிவகுமார்,
  16. அரக்கோணம்- ராஜேந்திரன்,
  17. வேலூர்- சுரேஷ்,
  18. கிருஷ்ணகிரி- ஸ்ரீகாருண்யா,
  19. தர்மபுரி- ராஜசேகர்,
  20. விழுப்புரம்- அன்பின் பொய்யாமொழி,
  21. சேலம்- பிரபு மணிகண்டன்

Leave a Comment