கமலஹாசன் ஆண்டி இந்தியன் அல்ல, ஆண்டி மனிதகுலம் : எச்.ராஜா

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன், அரவக்குறிச்சியில் தேர்தல் பிரச்சாரத்தின் போது, ‘சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு ஹிந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே.’ என தெரிவித்துள்ளார்.

இவரது இந்த கருத்துக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து எச்.ராஜா அவர்கள் கூறுகையில், கமலஹாசன் ஆண்டி இந்தியன் அல்ல, ஆண்டி மனிதகுலம் என விமர்சித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், இந்துக்களை தவறாக பேசியதற்கு மன்னிப்பு கேட்காவிட்டால், கவிஞர் வைரமுத்துவுக்கு ஏற்பட்ட நிலை தான், கமலஹாசனுக்கு ஏற்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment