கமல்ஹாசன் சொத்து இவ்வளவு கோடியா..? வேட்புமனுவில் வெளியான விபரம்..!

கமல்ஹாசன் மொத்த சொத்து மதிப்பு ரூ.176 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தலை தொடர்ந்து, தற்போது வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இதனால், அரசியல் கட்சியினர் ஒருபுறம் வேட்புமனு தாக்கல் மறுபுறம் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர். வேட்புமனு தாக்கல் கடந்த 12-ஆம் தேதி முதல் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.

இதைத்தொடர்ந்து, நேற்றைய நாள் முகூர்த்த நாளாக இருந்ததால் பல முக்கிய வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர். நேற்று மட்டும் முதல்வர் பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், துரைமுருகன், டிடிவி தினகரன், கமல்ஹாசன், வானதி சீனிவாசன், சீமான், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

இந்நிலையில், கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடம் நடிகர் கமல்ஹாசன் தனது சொத்து மதிப்பு விவரங்களை குறிப்பிட்டுள்ளார். அதில், கமல்ஹாசனுக்கு தமிழகம் மற்றும் லண்டனில் சொத்து இருப்பது வேட்புமனுவில் தெரியவந்துள்ளது. 45 கோடியே 9 லட்சம் ரூபாய்க்கு அசையும் சொத்து இருப்பதாகவும், 131 கோடியே 84 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் மதிப்பில் அசையா சொத்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 49.50 கோடி கடன் இருப்பதாகவும், 2.7 கோடி மதிப்பில்  லெக்சஸ் மாடல் காரும், 1 கோடி மதிப்பில் பிஎம்டபுள்யூ காரும், லண்டனில் 2.50 கோடி மதிப்பில் வீடும் உள்ளதாக வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார்.

author avatar
murugan