Thursday, November 30, 2023
Homeசினிமாகெட்டப்பை சும்மா அதிருதே!! சம்பவம் செய்ய காத்திருக்கும் உலக நாயகன்...

கெட்டப்பை சும்மா அதிருதே!! சம்பவம் செய்ய காத்திருக்கும் உலக நாயகன்…

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய 224-வது திரைப்படத்தில் நடிக்கிறார். இந்த திரைப்படத்தினை ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனமே தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

தற்காலிகமாக இந்த திரைப்படத்திற்கு ‘KH234’ என்று தலைப்பு வைக்கப்பட்டு இருக்கிறது. தற்போது, இப்படத்தின் டைட்டில் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளது. இந்நிலையில், படத்தில் நடிக்கும் கமல் கதாபாத்திரத்தின் போஸ்டரை படக்குழு வெளியிடுள்ளது. போஸ்டரில் நடிகர் கமல்ஹாசன் சாக்கு துணியை உடம்பில் போற்றிக்கொண்டு வித்தியாசமான லுக்கில் சும்மா மிரட்டியுள்ளார்.

ஏற்கெனவே, தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் பிலிம்ஸ், ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம் மற்றும் வீடியோவை வெளியிட்டு படத்தின் ஹைப்பை ஏத்தியுள்ள நிலையில், தற்போது படத்தின் போஸ்டரை வெளியிட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

இந்தியன் 2 டீசர் வெளியாகிய சில நாட்களில், KH234 படத்தின் அப்டேட் இன்று வெளியாகியுள்ளதால், உலக நாயகனின் ரசிகர்கள் பிரம்மாண்ட உற்சாகத்தில் உள்ளனர். சமீபத்தில், இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கப்படவிருக்கும் நிலையில், படத்தின் பூஜை மற்றும் படத்தின் வேலைகள் தொடங்கப்பட்டுள்ளதாக வீடியோ ஒன்றை வெளியீட்டு படக்குழு அறிவித்தது.

இதற்கிடையில், கமல்ஹாசன் இந்தியன் 2 படத்தில் நடித்து முடித்திருக்கும் நிலையில், அடுத்ததாக இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். அந்த படத்தில் நடித்து முடித்த பிறகு கமல்ஹாசன் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகவுள்ள KH234 படத்தில் நடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.