மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் கமலஹாசன்..!

மருத்துவமனையில் இருந்து சிகிச்சை முடிந்து கமலஹாசன் வீடு திரும்பினார். 

ஹைதராபாத்தில் இருந்து சென்னை திரும்பிய மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். லேசான காய்ச்சல் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில், இன்று அவர் வீடு திரும்பியுள்ளார். கமலஹாசன் அவர்கள் மேலும் சில நாட்கள் ஓய்வில் இருக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment