கமல்ஹாசன் அரசியல்வாதி கிடையாது; பொழுது போகாமல், அரசியலுக்கு வந்திருக்கிறார் !

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு , தமிழக அரசியல் கட்சிகள் தங்களது பல கட்ட பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது.திமுக மக்கள் கிராம சபை என்று பிரச்சார மேடையை ஆரம்பிக்க .தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சேலத்திலிருந்து அதிமுகவின் பிரச்சாரத்தை ஆரம்பித்தார்.

மக்கள் நீதி மய்ய கட்சி  தலைவர் கமல் ஹாசன் ஊழல் ,திராவிடம்,எம்.ஜி.ஆர் என்று தனது பிரச்சார போக்கை சற்று வித்தியாசமாக கொண்டு செல்கிறார் .தனது பிரச்சாரத்தில் ஒரு படி மேலே சென்று ” புரட்சித் தலைவர் திமுகவில் இருந்தபோது திமுக திலகம் அல்ல; தனிக்கட்சி துவங்கிய பிறகு அதிமுக திலகமும் அல்ல; என்றென்றும் அவர் மக்கள் திலகம். எம்.ஜி.ஆர் முகத்தைக் கூட பார்த்திராதவர்களே, நான் அவர் மடியில் வளர்ந்தவன். நினைவிருக்கட்டும் ” என்று ட்விட்டரில் பதிவிட இது சற்று அதிமுகவினரை கோபமடைய வைத்துள்ளது.

இந்நிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், கமல்ஹாசன் அரசியல்வாதி கிடையாது. ஓய்வு நேரத்தில் பொழுது போகாமல், அரசியலுக்கு வந்திருக்கிறார். எம்ஜிஆரை பிறர் ரசிக்கலாம்; ஆனால் அவரை சொந்தம் கொண்டாட அதிமுகவுக்கு மட்டுமே உரிமை உள்ளது என்று கூறினார்.

author avatar
Castro Murugan