வெற்றிமாறன் இயக்கத்தில் கமல்ஹாசன்..??

வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல். 

தமிழ் சினிமாவில் பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன் ஆகிய வெற்றி படங்களை இயக்கியவர் இயக்குனர் வெற்றி மாறன். தற்போது நடிகர் சூரி மற்றும் விஜய்சேதுபதியை வைத்து விடுதலை என்ற படத்தை இயக்கி வருகிறார். படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில், நல்ல விமர்சனத்தை பெற்றது,  இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் சூர்யாவை வைத்து வாடிவாசல் என்ற படத்தை இயக்கவுள்ளார். இந்த ஆண்டு இறுதியில் வாடிவாசல் படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், தற்போது இயக்குனர் வெற்றி மாறன் வாடிவாசல் படத்தை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் கமல்ஹாசனை வைத்து ஒரு திரைப்படம் எடுக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்போது நடிகர் கமல் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் விக்ரம் படத்தில் நடித்து வருகிறார், இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக இந்தியன் 2 படத்தில் நடிப்பார் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இந்த இரண்டு படங்களை தொடர்ந்து இயக்குனர் வெற்றி மாறன் இயக்கும் படத்தில் நடிப்பார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. விரைவில் இதனை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.