29 C
Chennai
Wednesday, June 7, 2023

தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 உயர்வு.!

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை...

பங்குச்சந்தை உயர்வு..! சென்செக்ஸ் 62,900 புள்ளிகளாக வர்த்தகம்..!

பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 161.69 புள்ளிகள் சரிந்து 62,900...

கள்ளக்குறிச்சி பள்ளி கலவர வழக்கு – குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது சிபிசிஐடி!

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி கலவர வழக்கில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது சிபிசிஐடி.

கள்ளக்குறிச்சி கனியாமூர் தனியார் பள்ளி மாணவி மரணம் மற்றும் கலவர வழக்கில் சிபிசிஐடி போலீசார் 1200 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. அதன்படி, கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி உயிரிழந்த வழக்கில் 1,200 பக்க குற்றப்பத்திரிகையை விழுப்புரம் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்தனர். சிபிசிஐடி ஆய்வாளர் தனலட்சுமி தலைமையிலான போலீசார் நீதிபதி புஷ்பராணி முன்னிலையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

மாணவி கொலை செய்யப்பட்டதற்கான நோக்கம் இல்லை, தற்கொலைக்கான முகாந்திரம் உள்ளது என குற்றப்பத்திரிகையில் தகவல் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த டிசம்பரில் கள்ளக்குறிச்சி அருகே கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் மாணவி மரணமடைந்ததை அடுத்து கலவரம் ஏற்பட்டது. மாணவி மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி போராட்டம் நடைபெற்றபோது, கலவரமாக வெடித்தது. இதில், பள்ளி சூறையாடப்பட்டு, பள்ளி வாகனம் வைத்து எரிக்கப்பட்டது.

இதன்பின் பள்ளி மூடப்பட்டு, சமீபத்தில் தான் மீண்டும் திறக்கப்பட்டது. இவ்வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், கைது நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டது. இந்த நிலையில், கள்ளக்குறிச்சி கனியாமூர் தனியார் பள்ளி மாணவி மரணம் மற்றும் கலவர வழக்கில் சிபிசிஐடி போலீசார் 1200 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.