#BREAKING: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் – உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை..!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நிலம் கையகப்படுத்தும் தமிழக அரசின் அரசாணையை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

புதிதாக உருவாக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்ட  வீரசோழபுரம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான 35 ஏக்கர் நிலத்தை அரசு தேர்வு செய்தது. இதற்கான அரசாணையை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அரசு வெளியிட்டது. இதைத்தொடர்ந்து, இதை எதிர்த்து ரங்கராஜன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.

அந்த மனுவில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலுக்கு வருமானம் என்பது அங்கு இருக்கக்கூடிய நிலம் சார்ந்து தான் வருகிறது என தனது மனுவில் கூறியிருந்தார். இதைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்த இடத்தை குத்தகைக்கு தான் எடுக்க வேண்டும். நிரந்தரமாக கூடாது, மாதம் வாடகையாக சிறு தொகையை கொடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை விதித்து நிலத்தை கையகப்படுத்துவதற்கான அனுமதியை வழங்கி இருந்தார்.

பின்னர், உயர்நீதிமன்ற உத்தரவிற்கு இடைக்கால தடைவிதிக்க வேண்டும் என ரங்கராஜன் உச்சநீதிமன்றம் மனு தாக்கல் செய்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நிலம் கையகப்படுத்த அரசாணைக்கு அனுமதி தந்த ஐகோர்ட்டு உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத்தடையை விதித்துள்ளது. இதனால், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

author avatar
murugan