காஜல் அகர்வாலை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்த ராஷ்மிகா.!

இன்ஸ்டாகிராமில் அதிக ரசிகர்கள் கொண்ட தென்னிந்தியா நடிகைகள் பட்டியலில் ராஷ்மிகா மந்தனா முதலிடம் பிடித்துள்ளார்.

நடிகை ராஷ்மிகா மந்தனா கன்னடம், தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்துவருகிறார். கடந்த 2016-ஆம் ஆண்டு ‘கிரிக் பார்ட்டி’ என்ற கன்னடம் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். அதனை தொடர்ந்து கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ‘கீதா கோவிந்தம்’ என்னும் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிரபலமானவர். இவருக்கு மிக பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. தமிழில் கார்த்திக்கு ஜோடியாக சுல்தான் படத்தின் மூலம் அறிமுகமானார்.

இந்த நிலையில், இன்ஸ்டாகிராமில் தென்னிந்திய நடிகைகளில் அதிக ரசிகர்கள் கொண்ட நடிகைகளின் பட்டியலில் நடிகை காஜல் அகர்வால் முதலிடத்தில் இருந்த நிலையில், தற்போது அவரை நடிகை ராஷ்மிகா மந்தனா பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளார். ராஷ்மிகா 19.3 மில்லியன் ஃபாலோயர்ஸ்களைப் பெற்றுள்ளார். தற்போது, இவருக்கு அடுத்த படியாக காஜல் அகர்வால், சமந்தா, ரகுல் ப்ரித் சிங்,  ஸ்ருதிஹாசன், ஆகியோர் உள்ளனர்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.