இன்டர்நேஷனல் லெவலில் மிரட்டி விருதுக்கு தயாரான கைதி.!

கார்த்தி நடித்து பிளாக் பஸ்டர் ஹிட் அடித்த கைதி திரைப்படம் சர்வதேச

By ragi | Published: Aug 01, 2020 03:43 PM

கார்த்தி நடித்து பிளாக் பஸ்டர் ஹிட் அடித்த கைதி திரைப்படம் சர்வதேச இந்திய திரைப்பட விழாவிற்கு தேர்வு செய்துள்ளதாக இயக்குநர் தெரிவித்துள்ளார்.

கடந்தாண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் கைதி. அதில் கார்த்தி ஹீரோவாக நடித்திருந்தார். மேலும் நரேன், தீனா, ஜார்ஜ் மரியான் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்கள். இந்த படம் விஜய் அவர்களின் பிகில் படத்துடன் போட்டியிட்டு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று பிளாக் பஸ்டர் ஹிட்டானது.

தற்போது இந்த படத்தை சர்வதேச இந்திய திரைப்பட விழா டொராண்டோவிற்கு தேர்வு செய்துள்ளதாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.அதனுடன் தனது படக்குழுவினருக்கு நன்றியையும் தெரிவித்துள்ளார். தற்போது அவருக்கு பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

 
Step2: Place in ads Display sections

unicc