கடலூர் மாவட்டத்தில் 11 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு…!!!

தமிழகத்தில் தொடர்ந்து காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வருகின்ற நிலையில், கடலூர் மாவட்டத்தில் 11 பேர் டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பதாக கண்டறியப்பட்டு, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் 1000க்கும் மேற்பட்டோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து கூடுதல் மருத்துவர்களை நியமிக்குமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.