#JustNow: இலங்கையின் புதிய பிரதமராகிறார் ரணில் விக்ரமசிங்கே?

#JustNow: இலங்கையின் புதிய பிரதமராகிறார் ரணில் விக்ரமசிங்கே?

இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதவி ஏற்கவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி உறுதி.

இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடிக்கு அரசே காரணம் என கூறி, அந்நாட்டில் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இலங்கை அரசு பதவி விலக வேண்டும் என கோரிக்கை விடுத்து, போராட்டங்கள் தீவிரமடைந்து வருகிறது. போராட்ட களம் வன்முறையாக வெடித்தது. இதனால் பொது சொத்துக்கள் சேதப்படுத்தி மற்றும் அரசியல் தலைவர்கள் வீடுகளில் மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் தீ வைப்பு உள்ளிட்ட சம்பவங்களில் இறங்கியுள்ளனர். இந்த சமயத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே பதவி விலகுவதாக அறிவித்திருந்தார்.

இதற்கான கடிதத்தை அதிபர் கோட்டாபய ராஜபக்சவிடம் அளித்திருந்தார். இருப்பினும், போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால், பொதுச்சொத்துக்களை சேதமபடுத்துவரை சுற்று தள்ளுங்கள் என்று அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது. வன்முறையை கைவிட்டு, மக்கள் அமைதி காக்குமாறும், பொருளாதாரத்தை மீட்டெடுக்க அரசு முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் அதிபர் தெரிவித்திருந்தார். பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே பதவி விலகிய நிலையில், அடுத்த பிரதமர் யார் என்று பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதவி ஏற்கவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி உறுதிப்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமராக பதவி ஏற்றதும் கொழும்புவில் உள்ள கோயிலில் வழிபாடு நடத்திய பிறகு ரணில் தனது பணிகளை தொடங்குவர் என தகவல் கூறப்படுகிறது. இலங்கையில் தற்போது அசாதாரண சூழல் நிலவி வரும் நிலையில், புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே இன்று மாலை 6.30 மணிக்கு பதவியேற்கிறார் என்றும் ஐக்கிய தேசிய கட்சி கூறியுள்ளது.

ரணில் பதவியேற்பு குறித்து அவரது கட்சியின் ரத்தினபுரி மாவட்ட தலைவர் சுப்பையா ஆனந்தகுமார் தகவல் தெரிவித்துள்ளார். மேலும், ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரான ரணில் விக்ரமசிங்கே 6வது முறையாக பிரதமராக பதவியேற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்
Join our channel google news Youtube