#JustNow: கருணாநிதி பிறந்தநாளில் மலர் கண்காட்சி – தமிழ்நாடு அரசு அறிவிப்பு

ஜூன் 3 கருணாநிதி பிறந்தநாள் அன்று சென்னை மாநகர வரலாற்றில் முதல் முறையாக அரசு சார்பில் மலர் கண்காட்சி.

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்தநாளான ஜூன் 3-ஆம் தேதி அன்று சென்னையில் தமிழக அரசு சார்பில் மலர் கண்காட்சி நடைபெறுகிறது என அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜூன் 3 கருணாநிதி பிறந்தநாள் அன்று சென்னை மாநகர வரலாற்றில் முதல் முறையாக அரசு சார்பில் மலர் கண்காட்சி நடைபெறுகிறது. சென்னை கலைவாணர் அரங்கில் ஜூன் 3 ஆம் தேதி முதல் ஜூன் 5 ஆம் தேதி வரை நடைபெறும் மலர் கண்காட்சியை முதலமைச்சர் முக ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். கருணாநிதி உருவ வடிவில் மலர் அலங்காரம், ஓராண்டின் சாதனையை விளக்கும் வகையில் மலர் கண்காட்சி வடிவமைக்கப்படுகிறது.

ஜூன் 3-ஆம் தேதி மலர் கண்காட்சியை முதலமைச்சர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்த பின்னர் 5-ஆம் தேதி வரை பொதுமக்கள் பார்வையிட அனுமதி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புனே, பெங்களூரு, ஊட்டி, ஒசூர், திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் இருந்து 200க்கும் மேற்பட்ட வகையிலான மலர்களால் கண்காட்சி நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 3-ஆம் தேதி முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பிறந்த தினத்தை,  அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என சட்டப் பேரவையில் முதல்வா் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமில்லாமல், மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதியின் உருவ சிலை, சென்னையில் வருகிற 28-ஆம் தேதி திறக்கப்படுகிறது. சிலையை குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு திறந்துவைக்கிறாா். சென்னை ஓமந்தூராா் அரசினா் தோட்ட வளாகத்தில் உள்ள பல்நோக்கு உயா்சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் கருணாநிதிக்கு ரூ.1.56 கோடி செலவில் சிலை அமைக்கப்பட்டு வரும் நிலையில், ஜூன் 3 கருணாநிதி பிறந்தநாள் அன்று சென்னை மாநகர வரலாற்றில் முதல் முறையாக அரசு சார்பில் மலர் கண்காட்சி நடைபெற உள்ளது.

பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Recent Posts

CSKvsGT : சதம் விளாசிய ஸ்டோய்னிஸ்… சென்னையை வீழ்த்தி லக்னோ திரில் வெற்றி..!

IPL2024:  லக்னோ அணி 19.3 ஓவரில் 4 விக்கெட்டைகளை இழந்து 213 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்று நடைபெற்ற ஐபிஎல் தொடரின்…

3 hours ago

ரச்சின் இன்னைக்கு டீம்ல இல்ல ..! டாஸ்ஸின் போது கெய்க்வாட் கூறியது இதுதான்!

Rutruaj Gaikwad : இன்றைய போட்டியில் வழக்கமாக களமிறங்கும் ரச்சின் ரவீந்திரா இடம்பெறாததற்கு ருதுராஜ் காரணம் கூறி இருந்தார். ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் சென்னை அணியும், லக்னோ…

5 hours ago

பிரதமர் மோடி மீது டெல்லி காவல் நிலையத்தில் புகார்!

PM Modi : பிரச்சாரத்தின் போது வெறுப்பூட்டும் வகையில் பிரதமர் மோடி பேசியதாக கூறி அவர்  மீது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் பிருந்தா காரத்…

6 hours ago

அதிரடி லுக் .. அட்டகாசமான விலை! ரியல்மி களமிறக்கும் அடுத்த மொபைல் !!

Realme Narzo 70 5G : ரியல்மி நிறுவனம் தனது அடுத்த மொபைலான ரியல்மி நார்ஸோ 70 5G மற்றும் ரியல்மி நார்ஸோ 70x 5G என்ற இரு…

6 hours ago

கில்லி படம் விக்ரம் பண்ண வேண்டியது! அவர் நடிக்க மறுத்த காரணம் இது தான்!

Ghilli : கில்லி படத்தில் விக்ரம் நடிக்க மறுத்த காரணம் குறித்த தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. இயக்குனர் தரணி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான…

8 hours ago

கூகுள் பாதையை தேர்ந்தெடுத்த மெட்டா.! மார்க்கின் மாஸ்டர் பிளான்…

Meta Horizon OS : மெட்டா நிறுவனம் உருவாகியுள்ள ஹரிசான் இயங்குதளத்தை VR ஹெட்செட்களில் மற்ற நிறுவனங்களும் பயன்படுத்தும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. மெட்டா நிறுவனர் மார்க்…

8 hours ago